×

மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பிய பாலியல் புகார் தொடர்பான வழக்கில் பிரிஜ் பூஷணுக்கு இடைகால ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு 

டெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பிய பாலியல் புகார் தொடர்பான வழக்கில் பிரிஜ் பூஷணுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இடைகால ஜாமீன் வழங்கியுள்ளது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவரை கைது செய்ய வழியுறுத்தியும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 50 நாட்களுக்கு மேலாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தினர்.
பின்னர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கபடும் என ஒன்றிய அரசு சார்பில் உறுதியளித்ததை தொடந்து தங்களது நீதிமன்றத்தின் வாயிலாக தொடரும் என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர்.இதற்கிடையே, டெல்லி காவல்துறையினர் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் வினோத் என்பவர் மீதும்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஏற்கனவே குற்றபத்திரிக்கை தக்கல் செய்யபட்ட நிலையில், அவர் கைது செய்யபடாமல் இருந்தார்.
இந்த நிலையில், இன்று பிரிஜ் பூஷன் சிங்  ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சிங் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞகர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு ஜாமின் வழங்குவது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதை தொடர்ந்து பிரிஜ் பூஷன் சிங் ரூ.25 ஆயிரத்தை பிணை தொகையாக கட்ட உத்தரவிட்டு அவருக்கு இடைகால ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஜாமின் வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

The post மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பிய பாலியல் புகார் தொடர்பான வழக்கில் பிரிஜ் பூஷணுக்கு இடைகால ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு  appeared first on Dinakaran.

Tags : Delhi Rose Avenue Court ,Brij Pushan ,Delhi ,Rose Avenue Court ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான...